ஒரு டெலிபேங்கரின் அனுபவங்கள்

Monday, 16 March 2009

Views

அறுபது பேரிடம் தொ(ல்)லைபேசி இரு கஸ்டமர்கள் பிடித்தால், அது பெரிய காரியம். நமக்குத் தேறும் அந்த ஒன்றிரு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சரியான பேப்பர்கள் இருக்காது.

மீதி 58 பேரில், சிலர் டீஸண்டாக "உங்களுக்கெல்லாம் வேற சோலி மயிரே கிடையாதா" என்று கேட்டு விட்டு, "எங்களோட சோலி மயிரே இது தாங்க" என்று நாம் பதில் சொல்லி முடிப்பதற்க்குள் தொடர்பை துண்டித்து விடுவார்கள்.

இன்னும் சிலர், ஏற்கனவே நம்மிடம் கடன் அட்டை வாங்கிவிட்டு அவதி பட்டுக் கொண்டிருப்பவர்கள், நீதிக்காக போராடிக் கொண்டிருப்பவர்கள். கடன் வாங்க வைக்க, 'குறைவான வட்டி விகிதம், பெட்ரோல் பங்கில், விமான டிக்கெட்டில் தள்ளுபடி, முதல் மூன்று மாத தள்ளுபடி, விழாக் கால சிறப்பு சலுகை' என்று இஷ்டத்துக்கு அள்ளி விட்ட பொய்களுக்கெல்லாம் அப்போது மொத்தமாக வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்கும்.

டார்கெட்டை ரீச் பண்ணவில்லை என்றால் மேனேஜர் திட்டும் திட்டை விட 'மரியாதையாக' எந்த வாடிக்கையாளரும் நமது ஃபேமிலியை டேமேஜ் செய்து விட முடியாது என்பதால், கைபேசியை மேனேஜரிடம் கொடுத்து 'ஸார். உங்க சொந்தக்காரங்க யாரோ பேசுறாங்க! ரொம்ப மரியாதை தெரிஞ்சவங்களா இருக்காங்க!' என்று அவனை மாட்டி விட்டு விட வேண்டியது தான். அவன் எழுதிக் கொடுத்து தானே பேசுகிறோம்.

அந்த ஒன்றிரண்டில் மிகச் சில வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு பற்றி தெரியாமல், அப்பிரானியாக லோன் ஷேங்ஷன் ஆனதும் தன்னிடம் பேசிய காலருக்கு, இனிப்புகள் அனுப்புவார்கள். .

இதுவரை பெண்கள் குரலையே கேட்டறியாமல் காய்ந்து கிடப்பவர்கள் ஏதோ சுஜாதா, சாண்டில்யனிடம் கேட்பது போல "உங்க நிஜ பேரு என்னங்க" என்று ஆரம்பித்து "நீங்க எங்க சம்பளம் எவ்ளோனு கேக்குறப்போ, நான் உங்க சைஸ் கேக்க கூடாதா?" என்பது வரை போவார்கள். எவ்வளவு வரம்பு மீறிப் போனாலும், இவர்களைத் திட்ட முடியாது. பேசும் தொனியில் சின்ன மாறுதல் தெரிந்தாலும் பக்கத்திலிருக்கும் கைகாட்டி மேனேஜரிடம் போட்டு கொடுத்து விடுவாள். அந்த கூதரை நாய்க்கு இந்த நாதாரி நாயே பரவாயில்லை என்பதால், அமைதியாக தொடர்பை துண்டித்து விட்டு, "சொல்லுங்க சார்.. நோட் பண்ணிக்கிறேன்" என்று தனியாகப் புலம்ப வேண்டியது தான்.

அழுகையே வந்தாலும் அடக்கிக் கொண்டு அடுத்த காலரிடம் "கங்ராஜுலேஷன்ஸ் சார்! உங்க பேரை கோல்டன் க்ரெடிட் கார்டுக்கு ஷார்ட் லிஸ்ட் பண்ணிருக்கோம்" என்று உற்சாகமாக சொல்ல வேண்டும்.

இந்த மாதிரி ஜொள்ளர்கள் சில சமயங்களில் இனிமையான குரலைக் கேட்டு ஏமாந்து 'நாம எப்பங்க மீட் பண்ணலாம்' என்று கேட்டு சொந்த செலவில் ஆப்பு வைத்துக் கொள்வார்கள். ஐஷ்வர்யா ராயை எதிர்பார்த்து வந்த அந்த அபிஷே(பே)க்கு நிலைமை, ராமதாஸிடம் மாட்டிக் கொண்ட கருனாநிதியை விட மோசமாக இருக்கும். பின்ன, கூட்டமாக ஐந்து அட்டு ஃபிகர்கள் போய் 'மாமா.. பிஸ்கோத்து' என்று நின்றால்?

சந்தித்து விட்ட கடனுக்கு ஒரு கார்னெட்டோவோ, பேல் பூரியோ வாங்கிக் கொடுத்துவிட்டு எஸ்ஸாகி விடலாம் என்றால், நம்ம மூளைக்கார பயபுள்ளைகள் நேரே Rain treeக்கோ, rain forestக்கோ கூட்டிப் போய் 'பஸ்ஸுக்கு காசில்ல. ஆத்தா வைய்யும். என்னை விட்டுடுங்க' என்று புலம்பும் வரை விடாமல் ஆப்பு அடித்துக் கொண்டே இருப்பார்கள்.

ஆப்பு வாங்கிவன் சும்மா இருப்பானா? 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று தன் நண்பர்களிடம்(!) 'டேய்! ஒரு சூப்பர் ஃபிகர் நம்பர் இருக்கு வேணுமா?' என்று கோர்த்துவிடுவான்.

அடிப்படை ஊதியம் 3000 போக, நாம் பிடிக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 150 ரூபாய் ஊக்கத் தொகை(incentive). இந்த ஊக்கத் தொகை ஒவ்வொரு வங்கிக்கும் வித்தியாசப்படும் என்பதால், மாதா மாதம் கம்பெனித் தாவல்கள் சகஜமாக நடக்கும். இப்படி கம்பெனி மாறிய தோழிகள் மூலம் தொலைபேசி எண்கள் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு rotationனில் வரும்.

ஏற்கனவே பேசி(திட்டு வாங்கி) விட்ட எண்களை டிக் செய்திருப்பார்கள். கவனக் குறைவாகவோ, வேண்டுமென்றோ மறந்திருந்தால், பேசிய எண்களுக்கே திரும்பப் பேச நேரலாம். சந்திரமுகியில் ரஜினிக்கும் சேர்த்து வடிவேலை மதன்பாப் அடிப்பாரே, அது போல நமக்கு முன்பே பேசியவர்களுக்கும் சேர்ந்து நாம் தான் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்.

அளவுக்கதிகமாக திட்டி விட்டால், அடுத்த சில நாட்களுக்கு 'அவர் நமது சொத்து'. மற்ற வங்கிகளில் பணியாற்றும் தோழிகளிடம் 'ஒரு கஸ்டமர் மாட்டினாருடி. ஆனா உங்க பேங்க் கார்ட் தான் வாங்குவாராம். நீ வேனா ட்ரை பண்ணிப் பாரேன்' என்று கோர்த்து விடப்படுவார். அவரே காலர் டோனாக ஏதாவது நல்ல பாடலை வைத்திருந்தால், 'நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்யா' என்றே முடிவு செய்து கொள்ளலாம்.

ஒரு முறை ஒரு கஸ்டமர் என் அழைப்புக்காகவே காத்திருந்தது போல மிக உற்சாகமாக நான் கேட்ட பத்து கேள்விகளுக்கும் பதிலலித்தார். ஆனால் சுயதொழில் செய்யும் அவரிடம் இன்ஷூரன்ஸ் பாலிஸி எதுவும் இல்லை. அதனால் கடன் அட்டை தர முடியாது என்றதும் "இதை முதலிலேயே சொல்லித் தொலையுறது தானே" என்று காய் காய் என்று காய்ச்சி விட்டார்.

ஐயோ பாவம்.. அந்த ஐந்து நிமிடத்தில் அம்பானியாகி இருப்பார். என்னால் தமிழகத்துக்கு எவ்வளவு பெரிய இழப்பு! பேப்பர்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு அலைக் கழித்திருந்தால் தெரிந்திருக்கும். நல்லதுக்கு காலம் இல்லை என்று ஸ்வாமி பிரேமானந்தா சும்மாவா சொன்னார்..

அடுத்த கஸ்டமரிடம் உஷாராக முதலிலேயே 'பாலிஸி இருக்கா' என்று கேட்டது தான் தாமதம்..

"ஆமாங்க.. காலையில எழுந்ததும் பொண்டாட்டி கையால பெட் காப்பி சாப்பிடனும். பல்ல விளக்கிட்டு வேலைக்காரி எண்ணெய் தேச்சு விட, மாமியார் தண்ணி மொண்டு ஊத்த, மச்சினிச்சி முதுகு தேச்சி விட ஜில்லுனு ஒரு குளியல். மல்லிப்பூ மாதிரி 4 இட்லி சாப்பிட்டுட்டு, மச்சினியை காலேஜ்ல ட்ராப் பண்றேன்னு சொல்லிட்டு அவ கூட மார்னிங் ஷோ சினிமாக்கு போய்ட்டு வீட்டுக்கு வந்து மதிய சாப்பாடு ஒரு கட்டு கட்டிட்டு, ஜம்முனு ஒரு தூக்கம் போடனும்.

சாயங்காலம் என் ஆளு மறுபடி ஒரு பெட் காப்பியுடன் என்னை எழுப்பினதும், 'பாருடா என் ஃபிகரை'னு ஊர்ல இருக்கறவனுக்கெல்லாம் கடியைக் கெளப்புற மாதிரி அவ தோள்ல கை போட்டுகிட்டு ஒரு வாக்கிங். எப்படியும் தோட்டம், தொரவுனு இருக்கிற பணக்காரப்புள்ளையா பாத்து தான் ப்ராக்கெட் போட்டிருப்பேன், வாக்கிங் நேரா அவுங்க தோட்டத்தில தான் முடியும். அங்க அவ கூட கொஞ்ச நேரம் குஜாலா இருந்துட்டு, வீட்டுக்கு வந்து வேலைக்காரியை கால் அமுக்கிவிட சொல்லிட்டு தூங்கிடனும். இது தாங்க என் பாலிசி".

நான் LIC மாதிரி ஏதாவது பாலிசி இருக்கானு கேட்டேன் ஸார்..

கொஞ்சம் டைம் குடுங்க.. எடுத்துருவோம்..

பரவால்லை ஸார்.. நீங்க சுயதொழில் பண்றீங்களா. இல்லை தனியார் நிறுவனத்தில வேலை பாக்கறீங்களா?

இவ்ளோ நேரம் உங்ககிட்ட பேசினதில இருந்தே நான் வெட்டிப்பய தான்னு தெரியலியாங்க? இனிமேலும் வேலைக்குப் போற மாதிரி யோசனை இல்லைங்க..

சாரி ஸார்.. உங்களுக்கு..

கட் பண்ணிடாதீங்க.. உங்களுக்கு தோட்டம், தொரவு ஏதாவது இருக்கா?

இல்ல ஸார்.. நாங்க குடும்பத்தோட மைலாப்பூர் கோயில் வாசல்ல பிச்சை எடுக்குறோம்.

பரவால்லைங்க.. உங்களுக்கு தங்கச்சி யாராவது இருக்காங்களா?

பொறந்ததும் சொல்லி அனுப்புறேன் ஸார்.. உங்க நேரத்தை எங்களுக்காக ஒதுக்கியதற்கு நன்றி..

பின் குறிப்பு : இந்தப் படைப்பில் கெட்ட வார்த்தைகள் அதிகமாக(இரண்டு முறை) உபயோகப் படுத்தப் பட்டிருப்பதால், இது சமூக ஆதிக்க அமைப்புகளை உருவாக்கும் மொழித் தளத்தினை உடைத்திருக்கிறது; ஆனாலும் இது பின் நவீனத்துவ எழுத்தாகாது - காத்தவராயன்(நன்றி - ஜ்யோவ்ராம் சுந்தர்)

முக்கிய பின் குறிப்பு: தயவு செய்து யாரும் பின்னூட்டத்தில், பின்குறிப்புக்கு அர்த்தம் கேட்டு விடாதீர்கள். எனக்கும் தெரியாது. பதிவை எப்படி முடிப்பது என்று தெரியாததால் இப்படி ஒரு பின் குறிப்புடன் முடித்திருக்கிறேன்.

16 மச்சீஸ் சொல்றாங்க:

யாத்ரீகன் said...

:-))))))))))))

INDIAN said...

nijama ippadi than nadakkudu.

Subankan said...

சோம்பேறீன்னு சொல்றீங்க, ஆனா தொழிலெல்லாம் பாக்குறீங்க போல‌

அறிவிலி said...

//நல்லதுக்கு காலம் இல்லை என்று ஸ்வாமி பிரேமானந்தா சும்மாவா சொன்னார்..//

ஆஹா... அவுங்களா.. நீங்க.......

அறிவிலி said...

//முக்கிய பின் குறிப்பு: தயவு செய்து யாரும் பின்னூட்டத்தில், பின்குறிப்புக்கு அர்த்தம் கேட்டு விடாதீர்கள்.//

யார கேட்டா தெரியும்? ப்ளீஸ்....சொல்லுங்களேன்

அறிவிலி said...

ஹ்ம்ம்ம்....

அந்த பாலிசி கெடைக்குமா?

அதை நீங்க மார்க்கெட் பண்ணலியா?

கொஞ்சம் ப்ரீமியம் முன்ன பின்ன போனாலும் பரவாயில்ல..

சிவக்குமரன் said...

நீங்க உங்க பக்கத்து விஷயத்த சொல்லிட்டீங்க, கொஞ்சம் அந்த கால் அட்டென்ட் பண்றவனோட நிலமைய யோசிச்சி பாருங்க,

♫சோம்பேறி♫ said...

/*யாத்ரீகன் சொன்னது…
:-)))))))))))) */

நன்றிகள் யாத்ரீகன்.

/*INDIAN சொன்னது…
nijama ippadi than nadakkudu.*/

அப்படியா.. முழுக்க உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றாலும், பாதிக்கு பாதியாவது உண்மையாகத் தான் இருக்க வேண்டும் இந்தியன்.

/*Subankan சொன்னது…
சோம்பேறீன்னு சொல்றீங்க, ஆனா தொழிலெல்லாம் பாக்குறீங்க போல‌*/

இது என் நிஜ அனுபவம் என்று தோன்றுமளவு எழுதியிருக்கிறேனா? மிக நன்றி சுபாங்கன். மர்மக் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமாரைப் பாத்தா, இதுவரை எத்தனைக் கொலை பண்ணிருகீங்க-னு கேப்பீங்க போல.. ஆமா.. tele banking ஒரு தொழிலா?

/*அறிவிலி சொன்னது…
//நல்லதுக்கு காலம் இல்லை என்று ஸ்வாமி பிரேமானந்தா சும்மாவா சொன்னார்..//
ஆஹா... அவுங்களா.. நீங்க.......
ஹ்ம்ம்ம்....
அந்த பாலிசி கெடைக்குமா?
அதை நீங்க மார்க்கெட் பண்ணலியா?
கொஞ்சம் ப்ரீமியம் முன்ன பின்ன போனாலும் பரவாயில்ல..*/

அது நான் இல்லைங்கோ.. உங்களுக்கு சுபாங்கனே பரவாயில்லை போல. :-(

/* //முக்கிய பின் குறிப்பு: தயவு செய்து யாரும் பின்னூட்டத்தில், பின்குறிப்புக்கு அர்த்தம் கேட்டு விடாதீர்கள்.//
யார கேட்டா தெரியும்? ப்ளீஸ்....சொல்லுங்களேன்*/

பக்கத்தில் யாருக்கோ நன்றி என்று போட்டிருக்கிறேனே!

/*இரா.சிவக்குமரன் சொன்னது…

நீங்க உங்க பக்கத்து விஷயத்த சொல்லிட்டீங்க, கொஞ்சம் அந்த கால் அட்டென்ட் பண்றவனோட நிலமைய யோசிச்சி பாருங்க*/

விஷயத்தை தான் சிவா சொல்லிருக்கேன். tele bankers பண்றது ஞாயம்னு சொல்லலையே.. கால் அட்டென்ட் பண்றவனோட நிலமை கஷ்டம் தான்னு நிறைய இடத்துல சொல்லிருக்கேனே!

அன்புடன் அருணா said...

ஓ இப்படி அடிக்கடி போன் போட்டு கடன் வாங்கச்சொல்றது நீங்கதானா ???
அன்புடன்அருணா

Boston Bala said...

கலக்கல்!

MSATHIA said...

ரகளையா இருக்கு. அதுவும் உங்க பாலிஸி இருக்கே தலைப்புல(நாளை மறுநாள் இருக்கே) அது டக்கர்

♫சோம்பேறி♫ said...

/*அன்புடன் அருணா சொன்னது…
ஓ இப்படி அடிக்கடி போன் போட்டு கடன் வாங்கச்சொல்றது நீங்கதானா ???
அன்புடன்அருணா*/

ஓ அடிக்கடி போன் போட்டு கேட்டாலும் கடன் வாங்காம டபாய்க்குறது நீங்கதானா ???

/*Boston Bala சொன்னது…
கலக்கல்!*/

நன்றி பாலா

/*Sathia சொன்னது…
ரகளையா இருக்கு. அதுவும் உங்க பாலிஸி இருக்கே தலைப்புல(நாளை மறுநாள் இருக்கே) அது டக்கர்*/

நன்றி சத்யா. கேப்ஷன் பிடிச்சிருக்குதுனா, நீங்களும் சோம்பேறி முன்னேற்றக் கழக உறுப்பினர் போல?

Jayaprakash Sampath said...

சூப்ப்ப்பருங்க...

♫சோம்பேறி♫ said...

/*Prakash சொன்னது…
சூப்ப்ப்பருங்க...*/

ரொம்ம்ம்ப நன்றிங்க...

Ungalranga said...

முருகா...நொந்து நூடுல்ஸ் ஆனேன்..

வாழ்த்துக்க..."ள்"..போட சோம்பேறித்தனமாய் இருக்கு..
அவ்வ்வ்வ்...

சென்ஷி said...

//இல்ல ஸார்.. நாங்க குடும்பத்தோட மைலாப்பூர் கோயில் வாசல்ல பிச்சை எடுக்குறோம்.//

ஆஹா :))

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket