அதிக ஹிட்ஸ் + பின்னூட்டம் பெற டிப்ஸ்

Wednesday, 11 March 2009

Views

6) ஒரு பதிவிற்கு ஒன்பது லேபில்கள் கொடுங்கள். அரசியல்,சமையல் எதையும் விட்டுவைக்கக் கூடாது. 'சமையலில் அரசியலா?' என்று வியந்து பலர் வர வாய்ப்புண்டு. மேலும் சமையலில் போட்டி குறைவாக இருக்கும் என்பதால் வாரக்கணக்கில் தமிழ்மண முகப்பில் தோன்ற வாய்ப்பு இருக்கிறது.

லேபிலில் நகைச்சுவை கட்டாயம் இருக்கவேண்டும். நாமெல்லாம் பதிவெழுதுவதே பெரிய நகைச்சுவை தானே!

10) நண்பர்கள் யாராவது யாஹூ, ஜிமெயிலில் 'சாட்'டினாலோ, ஏன் தொலை பேசினாலோ கூட தொடர்பை துண்டித்து விட்டு உங்கள் பதிவின் பின்னூட்டத்தில் அவருடன் சாட் செய்ய ஆரம்பியுங்கள்.

யாராவது புதியவர் தப்பித் தவறி உங்கள் பதிவில் பின்னூட்டி விட்டால், அப்படியே கோழியை அமுக்குவது போல அமுக்கி விடுங்கள். ஒரு ஸ்மைலி மட்டும் போட்டு விட்டு எஸ்ஸாகி இருந்தால் கூட, வாங்க.. உக்காருங்க.. வருகைக்கு நன்றி, இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்ற ரீதியில் நான்கு பின்னூட்டங்களை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்.

11) லட்சம் ஹிட்ஸ் பெற ஆதரவளித்த வாசகப் பெருமக்களுக்கு நன்றி எனத் தலைப்பிடலாம். 'இவ்வளவு பிரபலமான பதிவரைத் தவறவிட்டுட்டோமே!' என்று வருபவர்களுக்கு, பாட்ஷா ரஜினி போஸ்டருடன் 'நான் ஒரு ஹிட் எடுத்தா நூறு ஹிட் எடுத்த மாதிரி' என்று பன்ச் டயலாக்குடன் வெறியேற்றலாம்.

8) அதிக பின்னூட்டங்கள் பெறும் பதிவில், 'இதைப் பற்றி நானும் ஒரு பதிவிட்டிருக்கிறேன்' என்று பின்னூட்டலாம். ஆனால் பின்னூட்டும் முன் அந்தப் பதிவை ஒரு முறை படித்து விடுவது நல்லது. அப்பதிவு அவரது மகளின் பூப்புனித நீராட்டு விழாவைப் பற்றியதாய் இருந்து, நீங்களும் அதைப் பற்றி எழுதியதாகப் பின்னூட்டி.. ரணகளமாகிவிடும்.

9) அதிக ஹிட்ஸ் பெற விரும்புபவர்கள் 'குங்குமத்தில் நான்' எனத் தலைப்பிடலாம். நம்ம பதிவர் வெகுஜன ஊடகத்தில் வந்திருக்கிறாரே என்று ஆவலாக வருபவர்களை ஏமாற்றாமல், நீங்கள் குங்குமப் பொட்டு வைத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, 'இந்த குங்குமத்தில் நான் அழகா இருக்கேனா?' என்று கேட்டு கட்டையைக் கொடுக்கலாம்.

அல்லது 'ஆவியில் நான்' எனத் தலைப்பிட்டு இட்லி ஆவியிலோ, நீராவியிலோ முகத்தை நுழைத்தபடி எடுத்த புகைப்படத்தை வெளியிடலாம். பேய், பிசாசு வகை ஆவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இருந்தால் கூடுதல் நலம்.

7) அநியாயத்துக்கு எழுத்துப் பிழைகளுடன் டைப்பவும்(தலைப்பு, உங்கள் பெயர் உட்பட). யாராவது தமிழ் ஆர்வலர்கள் தமிழைக் கொலை செய்வதைக் கண்டு பொங்கி 'உன் படைப்பில் பிழை இருக்கிறது' என்று பின்னூட்டக் கூடும்.

இப்பதிவில் உள்ளது போல, எண்களை வரிசைப்படி போடாமல், உங்கள் இஷ்டத்துக்கு மாற்றி மாற்றி போடலாம். 'அருமையான பின் நவீனத்துவ படைப்பு' என்று சில அப்பிரானிகளும், 'ஒன்னு ரெண்டு கூட தெரியல. நாதாரி நீயெல்லாம் என்னத்துக்குடா பதிவெழுதுற?' என்று பல அறிவு ஜீவிகளும் பின்னூட்டக்கூடும்.

12) 'அதிக ஹிட்ஸ் பெற டிப்ஸ்' என்று தலைப்பிட்டு இந்த மாதிரி மொக்கை போடாமல் சீரியஸான யோசனைகள் தரலாம்.

40 மச்சீஸ் சொல்றாங்க:

எட்வின் said...

நல்லா சொன்னீங்க போங்க :)
வரிசை எண் இட்டதில் கூட காமெடி பண்ணியிருக்கீங்க போல

எட்வின் said...

உங்களது template மிக அருமை
2 பின்னூட்டம் போதுமா... இல்ல!!!

இராகவன் நைஜிரியா said...

நம்பர் தப்பு தப்பா போட்டு இருக்கீங்க.. அப்படின்னு பின்னூட்டம் போடலாம் நினைச்சுகிட்டு இருக்கும் போதே...
// இப்பதிவில் உள்ளது போல, எண்களை வரிசைப்படி போடாமல், உங்கள் இஷ்டத்துக்கு மாற்றி மாற்றி போடலாம். //

இது மாதிரி நீங்களே எழுதிட்டீங்க.

அதிக பின்னூட்டம் வரணும் என்றால், தப்பை சரியா தப்பு தப்பா பண்ணணும். அது மட்டுமல்ல, தப்பு பண்ணியிருக்கேன் அப்படின்னு பதிவுல எழுதக்கூடாது. தப்பு பண்ணிட்டு, தப்பு பண்ணியிருக்கேன் அப்படின்னு தப்பு தப்பா எழுதிறா தப்பு பண்ணா, அது தப்பு.

சரிங்களா?

இராகவன் நைஜிரியா said...

// எட்வின் சொன்னது…

உங்களது template மிக அருமை
2 பின்னூட்டம் போதுமா... இல்ல!!! //

என்னங்க இது .. யான பசிக்கு சோள பொறி போட்டா மாதிரி..

2 பின்னூட்டம் போதுமா அப்படின்னு கேட்டுகிட்டு..

போடுங்க ஒரு 50 வரைக்கும்.. சந்தோஷப்படுவோமில்ல.

இராகவன் நைஜிரியா said...

// 12) 'அதிக ஹிட்ஸ் பெற டிப்ஸ்' என்று தலைப்பிட்டு இந்த மாதிரி மொக்கை போடாமல் சீரியஸான யோசனைகள் தரலாம். //

இதுவும் மிக அருமையான யோசனைதாங்க..

இராகவன் நைஜிரியா said...

// யாராவது புதியவர் தப்பித் தவறி உங்கள் பதிவில் பின்னூட்டி விட்டால், அப்படியே கோழியை அமுக்குவது போல அமுக்கி விடுங்கள். ஒரு ஸ்மைலி மட்டும் போட்டு விட்டு எஸ்ஸாகி இருந்தால் கூட, வாங்க.. உக்காருங்க.. வருகைக்கு நன்றி, இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்ற ரீதியில் நான்கு பின்னூட்டங்களை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள். //

ஆஹா... எப்படிங்க இதெல்லாம். முடிஞ்சா.. உங்களை நீங்களே திட்டி போட்டு்குங்க அப்படின்னு சொல்வீங்க போலிருக்கே...

இராகவன் நைஜிரியா said...

தமிழிஷ், தமிழ்மணம் இரண்டுலேயும் ஓட்டு போட்டுவிட்டு, இரண்டுலேயும் ஓட்டு போட்டாச்சு அப்படின்னு ஒரு பின்னூட்டம் போடுங்க...

இது ரொம்ப அவசியம். அப்பத்தான் உங்க பதிவுக்கு அவர் ஓட்டு போடுவாரு..

ஹாய். சோம்பேறி, உங்களுக்கு தமிழிஷ், தமிழ்மணம், இரண்டுலேயும் சோம்பேறித்தனப் படாம ஒட்டு போட்டுட்டேன்.

இராகவன் நைஜிரியா said...

அலுவலக ஆணிகளுக்கு நடுவில் 5 பின்னூட்டம் போட்டு இருக்கேன்.

ஞாபகம் இருக்கட்டும். சும்மா சோம்பேறித்தனமா இருக்கக் கூடாது.

போய் நாலு ப்ளாக் படிச்சுட்டு, ஒட்டு போட்டுட்டு வாங்க.. இங்கேயும் நாலு பேர் வரணமில்ல.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஹாஹாஹா :) :) :)

♫சோம்பேறி♫ said...

/*எட்வின் சொன்னது…
நல்லா சொன்னீங்க போங்க :)
வரிசை எண் இட்டதில் கூட காமெடி பண்ணியிருக்கீங்க போல
உங்களது template மிக அருமை
2 பின்னூட்டம் போதுமா... இல்ல!!!*/

இரண்டு பின்னூட்டங்களே அதிகம்.. நன்றி எட்வின்.
www.freetemplates.blogspot.com
www.eblogtemplates.com/templates/blogger-templates
இந்த இரண்டிலும் பாருங்கள்.

www.pyzam.com போனால் animated templates கூட கிடைக்கும்.(ஆனால் வேலை செய்யாது)

/*இராகவன் நைஜிரியா சொன்னது…

அதிக பின்னூட்டம் வரணும் என்றால், தப்பை சரியா தப்பு தப்பா பண்ணணும். அது மட்டுமல்ல, தப்பு பண்ணியிருக்கேன் அப்படின்னு பதிவுல எழுதக்கூடாது. தப்பு பண்ணிட்டு, தப்பு பண்ணியிருக்கேன் அப்படின்னு தப்பு தப்பா எழுதிறா தப்பு பண்ணா, அது தப்பு.

சரிங்களா?*/

தப்பு.. சே.. சரிங்க..

/*என்னங்க இது .. யான பசிக்கு சோள பொறி போட்டா மாதிரி..
2 பின்னூட்டம் போதுமா அப்படின்னு கேட்டுகிட்டு..
போடுங்க ஒரு 50 வரைக்கும்.. சந்தோஷப்படுவோமில்ல.*/

இரண்டு பின்னூட்டங்களே அதிகம்..

/*இதுவும் மிக அருமையான யோசனைதாங்க..*/

நன்றி ராகவன்..

/*ஆஹா... எப்படிங்க இதெல்லாம். முடிஞ்சா.. உங்களை நீங்களே திட்டி போட்டு்குங்க அப்படின்னு சொல்வீங்க போலிருக்கே...*/

ஆமாங்க.. அனானி, அதர் ஆப்ஷனெல்லாம் எதுக்கு இருக்கு?

/*தமிழிஷ், தமிழ்மணம் இரண்டுலேயும் ஓட்டு போட்டுவிட்டு, இரண்டுலேயும் ஓட்டு போட்டாச்சு அப்படின்னு ஒரு பின்னூட்டம் போடுங்க...
இது ரொம்ப அவசியம். அப்பத்தான் உங்க பதிவுக்கு அவர் ஓட்டு போடுவாரு..
ஹாய். சோம்பேறி, உங்களுக்கு தமிழிஷ், தமிழ்மணம், இரண்டுலேயும் சோம்பேறித்தனப் படாம ஒட்டு போட்டுட்டேன்.*/

ஓட்டுக்கு ரொம்ப நன்றி. கண்கள் பனிக்கின்றன.. இதயம் இனிக்கிறது..

/*அலுவலக ஆணிகளுக்கு நடுவில் 5 பின்னூட்டம் போட்டு இருக்கேன்.
ஞாபகம் இருக்கட்டும். சும்மா சோம்பேறித்தனமா இருக்கக் கூடாது.
போய் நாலு ப்ளாக் படிச்சுட்டு, ஒட்டு போட்டுட்டு வாங்க.. இங்கேயும் நாலு பேர் வரணமில்ல.*/

உங்களுக்கு இதயத்தில் இடம் இருக்கிறது உடன்பிறப்பே!

/*ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…
ஹாஹாஹா :) :) :)*/

சத்தமாக சிரித்ததோடு, மூன்று புன்னகைகளும் பூத்ததற்கு நன்றி.

Anonymous said...

நானும் இதே மாதிரி சிந்தித்து உள்ளேன் ...
ரொம்ப நக்கலா சொல்லி இருக்கீங்க ....
உங்களை மாதிரி எனக்கு ரொம்ப தெளிவு இல்லை ..
இருந்தாலும் நான் எழுதினத சும்மா ஒரு தடவை பார்க்காது தப்பு இல்லை ...

♫சோம்பேறி♫ said...

/*மந்திரன் சொன்னது…

நானும் இதே மாதிரி சிந்தித்து உள்ளேன் ...
ரொம்ப நக்கலா சொல்லி இருக்கீங்க ....
உங்களை மாதிரி எனக்கு ரொம்ப தெளிவு இல்லை ..
இருந்தாலும் நான் எழுதினத சும்மா ஒரு தடவை பார்க்காது தப்பு இல்லை ...*/

உங்கள் பதிவு ரொம்ப சீரியசாக இருக்கிறது மந்திரன். எனக்கு பதிவுலகம் அறிமுகமாகி நான்கே மாதங்கள் தான் ஆகிறது என்பதால், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சம்பவங்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை.

Anonymous said...

உங்க blog caption கலக்கலா இருக்கு. எல்லா பதிவுகளையும் படிச்சேன். நக்கல், நையாண்டி, நகைச்சுவை எல்லாம் உங்களுக்கு இயல்பா வருது. தொடர்ந்து எழுதுங்க.
வலையுலகில் மேலும் வளர வாழ்த்துக்கள்.;-)))

nTamil said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

மதிபாலா said...

ரொம்ப நாள் கழிச்சி என்னை சிந்திக்கவும் சிரிக்கவும் வச்ச பதிவு இது..

கலக்கீட்டீங்க போங்க.....

பாலா said...

//ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது...//

அதானே...., நாளைக்கு பின்னூட்டம் போடலாம்னு நினைச்சேன்.! நாளான்னிக்கு வந்து போட்டுடுறேன்!

என்னை.. கோழி அமுக்கற மாதிரி அமுக்குங்கோவ்.

♫சோம்பேறி♫ said...

பெயரில்லா சொன்னது…
உங்க blog caption கலக்கலா இருக்கு. எல்லா பதிவுகளையும் படிச்சேன். நக்கல், நையாண்டி, நகைச்சுவை எல்லாம் உங்களுக்கு இயல்பா வருது. தொடர்ந்து எழுதுங்க.
வலையுலகில் மேலும் வளர வாழ்த்துக்கள்.;-)))

நன்றி நண்பரே! நிஜமாவே எல்லா பதிவுகளையும் படிச்சீங்களா? ரொம்ப ரொம்ப சந்தோஷம். பிடிக்காத பதிவைப் பத்தியும் சொல்லிருந்தீங்கன்னா, தொடர்ந்து எழுத வசதியாக இருந்திருக்கும். இன்னும் ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பேன். வாழ்த்துக்களுக்கு நன்றி.

/*மதிபாலா சொன்னது…
ரொம்ப நாள் கழிச்சி என்னை சிந்திக்கவும் சிரிக்கவும் வச்ச பதிவு இது..
கலக்கீட்டீங்க போங்க.....*/

மிக மிக நன்றி மதுபாலா.. சிரிப்போட நிறுத்திக்கோங்க.. பதிவில் இருக்குற மாதிரி சிந்திச்சு எனக்குப் போட்டியா வந்துடாதீங்க..

/*ஹாலிவுட் பாலா சொன்னது…
//ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது...//
அதானே...., நாளைக்கு பின்னூட்டம் போடலாம்னு நினைச்சேன்.! நாளான்னிக்கு வந்து போட்டுடுறேன்!
என்னை.. கோழி அமுக்கற மாதிரி அமுக்குங்கோவ்.*/

பைய பதறாம ஏதாவது காத்து வாங்குற பதிவா பாத்து பின்னூட்டம் போடுங்க..

ரமேஷ் வைத்யா said...

பிரமாதம்............ :)))))))

வேத்தியன் said...

கலக்கிப்புட்டீக பாஸு...
சூப்பர்...

வேத்தியன் said...

இராகவன் நைஜிரியா சொன்னது…

தமிழிஷ், தமிழ்மணம் இரண்டுலேயும் ஓட்டு போட்டுவிட்டு, இரண்டுலேயும் ஓட்டு போட்டாச்சு அப்படின்னு ஒரு பின்னூட்டம் போடுங்க...//

தமிழிஷ்,தமிழ்மணம் ரெண்டுலயும் ஓட்டுப் போட்டாச்சுங்கோ...
:-)))

வேத்தியன் said...

//ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது...//

அட நம்மாளா நீங்க???
சொல்லவே இல்ல???
:-)))

வேத்தியன் said...

லேபிலில் நகைச்சுவை கட்டாயம் இருக்கவேண்டும். நாமெல்லாம் பதிவெழுதுவதே பெரிய நகைச்சுவை தானே!//

அதுன்னா சரிதான்...

வேத்தியன் said...

12) 'அதிக ஹிட்ஸ் பெற டிப்ஸ்' என்று தலைப்பிட்டு இந்த மாதிரி மொக்கை போடாமல் சீரியஸான யோசனைகள் தரலாம். //

ஒத்துக் கிட்டா சரிதான்...
(ச்சும்மா உல்லுலாயிக்கு)

வேத்தியன் said...

11) லட்சம் ஹிட்ஸ் பெற ஆதரவளித்த வாசகப் பெருமக்களுக்கு நன்றி எனத் தலைப்பிடலாம். 'இவ்வளவு பிரபலமான பதிவரைத் தவறவிட்டுட்டோமே!' என்று வருபவர்களுக்கு, பாட்ஷா ரஜினி போஸ்டருடன் 'நான் ஒரு ஹிட் எடுத்தா நூறு ஹிட் எடுத்த மாதிரி' என்று பன்ச் டயலாக்குடன் வெறியேற்றலாம்.//

இதுல ஏதோ உள்குத்து, வெளிக்குத்து எல்லாம் இருகும் போல???
:-)))

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

>>அதிக ஹிட்ஸ் பெற விரும்புபவர்கள் 'குங்குமத்தில் நான்' எனத் தலைப்பிடலாம். நம்ம பதிவர் வெகுஜன ஊடகத்தில் வந்திருக்கிறாரே என்று ஆவலாக வருபவர்களை ஏமாற்றாமல், நீங்கள் குங்குமப் பொட்டு வைத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, 'இந்த குங்குமத்தில் நான் அழகா இருக்கேனா?' என்று கேட்டு கட்டையைக் கொடுக்கலாம்.

அல்லது 'ஆவியில் நான்' எனத் தலைப்பிட்டு இட்லி ஆவியிலோ, நீராவியிலோ முகத்தை நுழைத்தபடி எடுத்த புகைப்படத்தை வெளியிடலாம். பேய், பிசாசு வகை ஆவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இருந்தால் கூடுதல் நலம்.

7) அநியாயத்துக்கு எழுத்துப் பிழைகளுடன் டைப்பவும்(தலைப்பு, உங்கள் பெயர் உட்பட). யாராவது தமிழ் ஆர்வலர்கள் தமிழைக் கொலை செய்வதைக் கண்டு பொங்கி 'உன் படைப்பில் பிழை இருக்கிறது' என்று பின்னூட்டக் கூடும்.>>

>> 'ஒன்னு ரெண்டு கூட தெரியல. நாதாரி நீயெல்லாம் என்னத்துக்குடா பதிவெழுதுற?' என்று பல அறிவு ஜீவிகளும் பின்னூட்டக்கூடும்>>

R.O.T.F.L

♫சோம்பேறி♫ said...

/* |ரமேஷ் வைத்யா சொன்னது…
| பிரமாதம்............ :)))))))

நன்றி ரமேஷ் வைத்யா....... :)))))))

/* |வேத்தியன் சொன்னது…
| கலக்கிப்புட்டீக பாஸு... சூப்பர்...
| தமிழிஷ்,தமிழ்மணம் ரெண்டுலயும் ஓட்டுப் போட்டாச்சுங்கோ...
| :-)))*/

நன்றிகள்..

| அட நம்மாளா நீங்க???
| சொல்லவே இல்ல???
| :-)))

நான் சொன்னேன். நீங்க தான் பாக்கல.

|அதுன்னா சரிதான்...
|ஒத்துக் கிட்டா சரிதான்...
(ச்சும்மா உல்லுலாயிக்கு)

நீங்க சீரியஸாவே சொன்னா கூட கோவிச்சுக்க மாட்டேன்.

|இதுல ஏதோ உள்குத்து, வெளிக்குத்து எல்லாம் இருகும் போல??? :-)))

சத்தியமா இல்லைங்க..

|அறிவன்#11802717200764379909 சொன்னது…
| R.O.T.F.L

தரையில் உருண்டு புரண்டு சிரித்ததற்கு மிக நன்றி அறிவன்.

அறிவிலி said...

சோம்பேறித்தனம் மூளைக்கு கெடையாது போல இருக்கே.

அறிவிலி said...

என்னை போன்ற ஈ ஒட்டும் பதிவர்கள் அதிகமாக இருப்பதால் "அதிக ஹிட்ஸ் + பின்னூட்டம் பெற டிப்ஸ்" என்று தலைப்பு வைத்தால், ஒஹோ என்று இல்லா விட்டாலும் நம் மற்ற பதிவுகளைவிட கூட்டம் அதிகமாக வரும்.

♫சோம்பேறி♫ said...

/*அறிவிலி சொன்னது…

சோம்பேறித்தனம் மூளைக்கு கெடையாது போல இருக்கே.

அறிவிலி சொன்னது…

என்னை போன்ற ஈ ஒட்டும் பதிவர்கள் அதிகமாக இருப்பதால் "அதிக ஹிட்ஸ் + பின்னூட்டம் பெற டிப்ஸ்" என்று தலைப்பு வைத்தால், ஒஹோ என்று இல்லா விட்டாலும் நம் மற்ற பதிவுகளைவிட கூட்டம் அதிகமாக வரும்.*/

Elephant one time. Cat one time.(யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும்)

கீழை ராஸா said...

முப்பது நாளில் புல்லாங்குழல் வாசிக்க கற்றுக்கொள்ளுங்கள்(தபால் மூலம்) என்ற ரீதியில் ஒரு அருமையான நகைச்சுவை பதிவு...கலக்குங்க...

முரளிகண்ணன் said...

நல்ல சிந்திச்சுருக்கீங்க

Subankan said...

சிரிச்சுச் சிரிச்சுக் கண்ணிரே வந்துவிட்ட‍து. நல்ல‍ நகைச்சுவை. அதுசரி ஏதோ டிப்ஸ் தர்றதா சொன்னீங்க?

மனுநீதி said...

உங்கள் எட்டாவது, 108ஆவது மற்றும் 1008 ஆவது குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன .

ஐயயோ!! நம்பெரல்லாம் மறந்து போச்சே..

ரொம்ப நல்ல பதிவு நண்பரே. உங்களது மத்த பதிவுகளையும் இன்னைக்கு படிச்சு முடிக்கணும்.

Anonymous said...

பதிவு நல்லா இருக்கு ..
//ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது

தமிழில் பெயர் வைத்தால் நெட் பில்லில் சலுகை உண்டு எனில் தயவு செய்து தெரியப் படுத்தவும்//

இப்போதான் இங்க வரென்.
இந்த 2 வரிகளையும் ரொம்ப ரசித்தேன் -

நசரேயன் said...

என்னவொரு தகவல்.. எல்லாம் நல்லா இருக்குன்னு சொன்னா நம்பவா போறீங்க

நிகழ்காலத்தில்... said...

வாழ்க்கையில் இப்படித்தான் சந்தோசமாக இருக்கணும்...

\\எனக்கு பதிவுலகம் அறிமுகமாகி நான்கே மாதங்கள் தான் ஆகிறது என்பதால், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சம்பவங்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை.\\

இதுவும் காமெடிதானே?????????

♫சோம்பேறி♫ said...

நன்றி வேந்தன்

நன்றி கீழை ராஸா..

நன்றி முரளிகண்ணன்

கண்ணீருக்கு நன்றி சுபாங்கன். தொழில் முறைப் போட்டியை முன்னிட்டு டிப்ஸ் தருவதாக படம் மட்டுமே காட்டப் படும்.

உள்ளத்தில் இருந்து மிக மிக நன்றி.

நன்றி பெயரிலி நண்பரே.. அந்த கேப்ஷனின் மூலம் Oasis என்ற ஒரு இசைக் குழு. இது அவர்கள் சொந்த சிந்தனையா என்று எனக்குத் தெரியாது.

நான் நம்புறேன் நசரேயன். மத்தவங்க தான் நம்ப மாடெங்கறாங்க..

தெய்வமே! நிஜமாவே, நான் புதுசு தாங்க.. இப்போது தான் நிறைய ஆராய்ச்சி பண்ணி அவர் பதிவில் இருந்த நான்கு சம்பவங்களில் இரண்டைக் கண்டுபிடித்திருக்கிறேன்.

கட்டபொம்மன் said...

அப்படியே நம்ம பக்கமும் வந்துட்டு போங்க


கட்டபொம்மன்
http://kattapomman.blogspot.com

கிரி said...

:-)))

ஹா ஹா ஹா

சென்ஷி said...

:-)

என் டமில் இங்கயும் பின்னூட்டியிருக்காரா!

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket