Views
இது என்னுடைய பத்தாவது பதிவு. (அட! கை தட்டுறத நிறுத்துங்க மக்கா.. பேசி முடிச்சுக்கிறேன்.) எந்த பிரபலமும் எழுத முன் வராததால், நானே எழுதுகிறேன். எனது 25வது பதிவை ஒரு வலையுலக பிரபலம் தான் எழுதுவார் என்று உறுதியளிக்கிறேன்.
இவ்வளவு நாளாக தமிழ்மணத்தை tamilmanam.com என்ற முகவரியில் தினமும் தேடி, காந்தி ஜெயந்தி அன்று டாஸ்மாக் எப்போ திறப்பார்கள் என்று ஏங்கும் குடிமகனைப் போல பார்த்துக் கொண்டிருந்தேன். அதோடு அப்பிரானியாக "கடைய எப்பண்ணே தெறப்பீக?" என்று ஒரு மின்னஞ்சல் வேறு.. தமிலிஷ்.காமில் பதிவு செய்து, என் இரண்டாவது படைப்பை அனுப்பி விட்டு வழக்கம் போல், கடவுச் சொல்லை(password) மறந்து விட்டேன். get new password வேலை செய்யாததால், அதையும் விட்டு விட்டேன். இருந்தாலும் அளவில்லா கடமையுணர்சியுடன் பதிவெழுதுவதை தொடர்ந்து கொண்டு தான் இருந்தேன். Elephant one time. Cat one time.
இரண்டு நாட்களுக்கு முன்பு தற்செயலாக ஒரு பதிவரின் சைட் பாரில்(sight bar அல்ல side bar) க்ளிக்கிய பிறகு தான் தமிழ்மணத்தின் உன்மையான முகவரியே தெரிந்தது. நேரத்தை வீணாக்காமல் உடனே பதிவு செய்து விட்டு, மறுமொழி மட்டுறுத்தும் பக்கத்தை திறந்து வைத்துக் காத்திருந்தேன். ஈ காக்கா கூட வரல.
நேற்றும் கமெண்ட் எதுவும் வரவில்லை என்றதும் 'ஏன்டா எழுத வேண்டும்' என்றாகி விட்டது. ஏதோ தன்னடக்கத்துக்காக நான் ஒரு பேக்கு, இது ஒரு மீமீ வலைப் பூ என்று சொன்னால், அதை ஒப்புதல் வாக்கு மூலமாக எடுத்துக்கொண்டு யாரும் கடைப்பக்கமே வரமாட்றாங்களே என்று கடுப்பாகி விட்டது.
ஏற்கனவே Hitstats, Feed jet போன்ற வசதிகளைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாலும், அது ஒன்னாப்பில் வாங்கிய பூஜ்யத்தையே காட்டி கேவலப்படுத்தும் என்பதால் தவிர்த்து வந்தேன். சரி, ஃபீட் ஜெட்டை முயற்சி செய்து பார்க்கலாம் என்று அமைத்து விட்டு பத்து நிமிடம் கழித்து பார்த்தால்.. அடங்கொன்னியா.. நான்கு பேர் தமிழ்மணத்திலிருந்து.. (அதுவும் முந்தின நாள் எழுதிய பதிவிற்கு)
“கங்ராட்ஸ் நீங்க எள்ளுத் தாத்தா ஆக போறீங்க”... என்ற வார்த்தைகளை கேட்ட பிறகு கிட்டத்தட்ட ஏழு,எட்டு மாதங்கள் அந்த வார்த்தைகள் கொடுக்கும் ஒரு இனம் புரியா நிலையின் ஊடே வேறு பல வேலைகளுக்கு இடையே வாழ்ந்து கொண்டிருந்தாலும்... ‘வீல்’என்ற அழுகையின் ஊடே மொட்டாய் மலராய்..ரத்தப் பாதங்கள்,பஞ்சுக் கைகள் என அந்த மலர்மழலைக் கொத்தாய் கைகளில் பார்க்கும் பொழுது ஏற்படும் உன்னத நிலையை வார்த்தைகளாய் மொழிபெயர்க்கத் தெரியாத ஒரு மெளன யவ்வணமான நிலைக்கு நிகராய்(நன்றி : நர்சிம்) எல்லாம் உணராவிட்டாலும், மிகவும் சந்தோஷமாகவே இருந்தது.
உடனே Gmailலில் ஒரு புது account திறந்து, அந்த அக்கவுண்டுடன் தமிலிஷில் எனது பதிவை சமர்ப்பித்து விட்டு, Hitstatடையும் பதிவில் இணைத்து விட்டு பார்த்தால், அந்த ஐந்து நிமிட இடைவெளியில் 28 ஹிட்டுகள். ஏழு பேர் ஆன்லைன். இருப்பு கொள்ளவில்லை எனக்கு. என் அம்மா பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதை என் தாத்தா, தென்னை மரத்தில் ஏறிக் கொண்டிருந்தவரைக் கூப்பிட்டு செவிட்டிலடித்து சொன்னாராம். அவர் உயிரோடு இல்லையே என்று வருத்தப்பட்டேன்.
4 மச்சீஸ் சொல்றாங்க:
நான் வேணா கணக்கை ஆரம்பிச்சி வைக்கட்டுமா??
இந்த word verificationa தூக்கிடுங்க...
இல்லனா இங்க கல்லா கட்டாது மாமு...
நீங்க மட்டும் இல்ல, இங்க நாங்க கூட சோம்பேறி தான்..
//என் அம்மா பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதை என் தாத்தா, தென்னை மரத்தில் ஏறிக் கொண்டிருந்தவரைக் கூப்பிட்டு செவிட்டிலடித்து சொன்னாராம். அவர் உயிரோடு இல்லையே என்று வருத்தப்பட்டேன்.//
:-))
நல்லவேளை நான் ஷார்ஜாவுல இருக்கேன்!
:) நல்லவேளை எல்லாருமே கணினியில் தான் படிக்கிறோம் சென்ஷி..
Post a Comment
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.