நம்புங்கய்யா! நாலு கூட்டணிக்கும் ஓட்டு போட்டேன்!

Wednesday 13 May, 2009

Views

எதுகை மொகனைக்காக சொல்லலைங்க.. மெய்யாலுமே நாலு கூட்டணிக்கும் ஓட்டு போட்டேன். அதைப் பத்தி சொல்றதுக்கு முந்தி, எங்க விருதுநகர் தொகுதி பத்தி கொஞ்சம் பில்டப் விட்டுக்கறேன்.

எனக்கு கார்த்திக்னா ரொம்ப ரொம்ப புடிக்கும். உள்ளத்தை அள்ளித்தா, பிஸ்தா படத்திலல்லாம் காமெடில கலக்கிருப்பாரு. அத விட விகடன் பேட்டில செமையா காமெடி பண்ணிருப்பாரு. என் விருதுநகர் தொகுதில கார்த்திக் நிக்கிறார்னு எப்போ தெரிஞ்சிச்சோ, அப்போவே அவருக்கு தான் என் ஓட்டுனு நெற்றியில் பச்சை குத்திக்கிட்டேன்.

ஆனா என் கூட சுத்துற வெளங்காத பசங்க, அவருக்கு ஓட்டு போடுற ஒரே ஆள் நீ மட்டும் தான். அதனால ஈசியா உன்னை ட்ரேஸ் பண்ணி, பதினாறாம் தேதி விடியும் முந்தி கட்சிக்காரங்க(காரர்), பத்திரிக்கைகாரங்கள்லாம் உங்க வீட்டு முன்னால பதவி, பேட்டி அது இதுனு குமிஞ்சுடுவாங்கனு பயமுறுத்திட்டாங்க.

நமக்கு இந்த பப்லிஸிட்டியெல்லாம் பிடிக்காதா.. அதனால அடுத்த ஆப்ஷனான விஜயகாந்த் பத்தி யோசிச்சேன். அவர் பிஎம் ஆயிட்டா நாட்டுல பொருளாதார நெருக்கடி கண்டிப்பா குறையும். அவரோட பாதுகாப்புக்காக தனியா செலவு செய்யத் தேவையில்ல. எந்தத் தீவிரவாதி டுப்பாக்கில டுமீல்னு சுட்டாலும் அவனுக்கே ஃபையர் பேக்காயிடும். தவிர பாக்கிஸ்தான் பார்டர்ல அவரை நிக்க வெச்சிட்டு, அங்க இருக்கற மத்த எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிடலாமேனு கணக்கு போட்டேன்.

ஆனா விதி வேற மாதிரி கணக்கு போட்டுச்சு. கொஞ்ச நாள் முந்தி, காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்க தாகூர் எங்க ஊர் பக்கமா வரும்போது கட்சிக் கொடி பிடிச்சுகிட்டு நின்னவங்களுக்கு ஆளுக்கு அம்பது ரூபா குடுத்திருக்காங்க. கொடி பிடிக்குறதுக்கே இவ்ளோனா, ஓட்டு போடுறதுக்கு நிறைய குடுப்பாங்கனு எதிர்பாத்தேன். Not bad. நூத்தியம்பது ரூபா குடுத்திருக்காங்க. ஆனா எங்க ஊர்பக்கம் நாயக்கமார் அதிகம்கறதனால, எப்படியும் வைகோவுக்கோ, பாண்டிய ராஜனுக்கோ தான் ஓட்டு விழும்னு நினைச்சுட்டு, பாதி ஊருக்கு பணம் குடுக்காம அவங்களே அமுக்கிட்டாங்க.

எங்க அப்பா கம்யூனிஸ்ட் கட்சிக்காரரா.. அதனால நான் வைகோவோட பம்பரத்துக்கு ஓட்டு போட்டா, ரொம்ப நாளா அவரு ஒளிச்சு வச்சிருக்கிற _______(குச்சி மிட்டாய் குருவி ரொட்டி என்று உங்களுக்குப் பிடித்த பதார்த்தத்தால் நிரப்பிக் கொள்ளவும்) எனக்குத் தர்றதா ப்ராமிஸ் பண்ணிருக்காரு. தவிர அந்தக் கட்சிக்காரங்க அம்பது ரூபா குடுத்தாங்க.

தே.மு.தி.க.காரங்களுக்கு மேலிடத்துலயிருந்து பணம் ரொம்ப கொஞ்சமாதான் வந்துச்சாம். அந்தப் பணத்துக்கு அவங்க ஃபுல்லா ஃபுல் வாங்கி வச்சுட்டாங்களாம். தேமுதிகல இருக்குற என் ஃப்ரண்ட் கிட்ட நானும் எங்கம்மாவும், மத்த கட்சி நிலவரத்தை சொல்லி 'உங்களுக்கு ஓட்டு போட்டா எவ்ளோ தருவீங்க'னு கேட்டதுக்கு, 'ஆளுக்கு ஒரு அவுன்ஸ் தரோம். குடிச்சுட்டு போங்க'னு சொல்லீட்டான் லூசுப்பய. இது தவிர, இந்த தேர்தல்ல விஜயகாந்தோ, கார்த்திக்கோ ஜெயிச்சாலும் அவங்களால (உடனே) பிஎம் ஆவ முடியாதுனு கடைசில தான் தெரிஞ்சது.

கடைசியில் யாருக்கு வாக்களித்தேன்?????? முடிவை சின்னத்திரையில் காண்க.

*********************

நான் ஓட்டு போட்ட நாலு கூட்டணி பேரையும் சொல்றேன். நோட் பண்ணிக்கோங்க. இவங்கள்ல ஒருத்தராவது கண்டிப்பா மானாட மயிலாட ஃபைனல்ஸ்ல முதல் மூனு இடத்துக்குள்ல வருவாங்க.

அருண் + அப்ஸரா, அஸார் + ரஜினி, ஃபயாஸ் + தர்ஷினி, ரஞ்சித் + ஐஷ்வர்யா.

அருண் நான் கடவுள் ருத்ரனா வந்து சும்மா கலக்கிட்டாரு. ஆனா கனேஷ்கர் ஆர்த்தி மாதிரியே ஓட்டு கேக்கும் போது கூழைக் கும்பிடு போடுறது, மண்டி போட்டு தரைய நக்குறதுனு ரொம்ப ஓவரா பண்ணினது எனக்குப் புடிக்கல. ஆனா அதுக்கு முந்தி அருண் பல்டி அடிச்சப்பவே ஓட்டு போட்டுட்டேன்.

அஸார் ஜோடி நல்லா தான் ஆடுறாங்க. கான்செப்டும் நல்லா தான் இருந்தது. ஆனா அவங்களுக்கு ஓவர் கான்பிடன்ஸ். அது எனக்கு புடிக்கல. லோகேஷ் சுஜிபாலா நிலைமை இவங்களுக்கு வர வாய்ப்பு இருக்கு.

ஃபயாஸ் தர்ஷினிக்கு இவ்ளோ விசிறிங்க இருக்காங்கனு பொள்ளாச்சி போனப்போ தான் எனக்கே தெரிஞ்சது. ஃபயாஸ் எடுத்த நொண்டி கான்செப்ட் பழசு தான்னாலும், இதுக்கு முன்னால ஆடினவங்களை விட நிறைய ரிஸ்க் எடுத்து சூப்பரா ஆடிருந்தாரு.

ரஞ்சித் ஜோடி நல்லா ஆடினாங்க தான். அவங்களுக்கு நான் ஓட்டு போட்டதுக்கு முக்கிய காரணம், ஐஷ்வர்யா அண்ணாவோட எதிர்பாரா மரணம்.

நிவாஸ் கிருத்திகா, போன தடவை ஓட்டு கேட்ட விதம் ரொம்ப பிடிச்சுருந்தது (எனக்கு சினிமாவைத் தவிர வேறொன்னும் தெரியாதுனு நிவாஸ் சொன்னது டச்சிங்கா இருந்தது). அவங்க செமி ஃபைனல்ஸ் வர்றதுக்கு ரெண்டு வோட் போட்டேன். ஆனா இந்த தடவை நிவாஸ் ஜோடி, ஏற்கனவே ஸேண்டி எடுத்திருந்த சைனீஸ் கான்செப்ட் எடுத்து நல்லா சொதப்பிருந்தாங்க. அதனால வோட் பண்ணல.

ராம் ப்ரியா ஜோடிக்கு அவங்க choreographer ஸேண்டிக்காகவே ஓட்டு போடனும்னு நினைச்சேன். ஆனா பேலன்ஸ் காலி. பரவாயில்ல. நெக்ஸ்ட் டைம் ரெண்டு வோட் பண்றேன்.

18 மச்சீஸ் சொல்றாங்க:

Vijay Anand said...

அப்ப Vote போடலா !
ஒரு Vote போச்சா !

♫சோம்பேறி♫ said...

அட.. சத்தியமா (ஒரே ஒரு) வோட் பண்ணினேன் விஜய்.

Vijay Anand said...

எங்க Tamilish Vote ஆ...

சென்ஷி said...

:-)))

கலக்கல்.. பயங்கரமா சிரிக்க வைச்சுட்டீங்க!!!

♫சோம்பேறி♫ said...

அவ்வ்வ்வ்.. எல்லா ஓட்டும் தான் விஜய். உங்க ஊர் எதுனு தெரிஞ்சிருந்தா அங்கயும் போய் உங்க ஓட்டையும் போட்டிருப்பேன்.

நன்றி சென்ஷி.. ஈஈஈஈஈஈஈஈ.. :-))))))))

Anonymous said...

:-)))) டைமிங்கான கலக்கல்.

நீங்க சொன்ன காரணத்துக்காகவே அடுத்த தேர்தல்ல விஜயகாந்த்துக்கு ஓட்டு போடலாம் போல இருக்கே....

சித்ரா

♫சோம்பேறி♫ said...

தேங்க்ஸ் சித்ரா.

சீரியஸாவே தேதிமுகக்கு ஓட்டு போடுற ஐடியா இருந்தா சொல்லுங்க. நான் அடுத்த தேர்தல்ல அவங்க சார்புல நிக்கலாம்னு இருக்கேன்.

Anonymous said...

தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.

அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.

ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா

♫சோம்பேறி♫ said...

(என்னைத் தவிர) யார் வந்தாலும் நம்ம எல்லாருக்கும் கோயிந்தா கோயிந்தா தான்.

திமுகவினர் ஒரு தொகுதிக்கு 30 கோடி செலவழித்திருக்கிறார்கள் என்று கேள்வி. ஆலங்குளம் பக்கம் ஒரு ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். அதனால் எங்க ஊர்ல மதிமுக வர வாய்ப்பு அதிகம்னு எனக்கு நம்பிக்கை இருந்தாலும், அடிச்சு சொல்ல முடியல.

(இது எனக்காக நீங்கள் டைப்பிய பின்னூட்டமாக இருக்காது. டெம்ப்ளேட் பின்னூட்டம் என்று நம்புகிறேன்)

Karthikeyan G said...

சூப்பர் பதிவு!!



(இது டெம்ப்ளேட் பின்னூட்டம் இல்லை என நீங்கள் நம்ப வேண்டும்)

♫சோம்பேறி♫ said...

மிகவும் நன்றி கார்த்திகேயன்ஜி.

(நம்புறேன்யா!! நம்புறேன்யா!!)

மனுநீதி said...

குச்சி முட்டாயும் குருவி ரொட்டியும் கெடச்சுதா சோம்பேறி ;-)

♫சோம்பேறி♫ said...

இல்லையே மனுநீதி.. தேர்தல் ரிசல்ட் வரட்டும்னு சொல்லிட்டாங்க:-(((

வைகோ ஜெயிக்கனும்னு எனக்காக எல்லாரும் கூட்டு பிரார்த்தனையோ, பொறியல் பிரார்த்தனையோ பண்ணுங்க ப்ளீஸ்.. _/\_

SUBBU said...

உங்கல நாடு கடத்தனும்யா :))))))))

கலையரசன் said...

எல்லா பதிவர்களும் படிப்பது போல எல்லோர் பற்றியும் எழுதுகின்றீர்கள்.
பக்கா பக்கா!!

டைம் இருந்தா நம்ம பக்கத்திற்கும் வாங்க!

♫சோம்பேறி♫ said...

/*SUBBU said...
உங்கல நாடு கடத்தனும்யா :))))))))*/

ஏன் சுப்பு? நான் என்னங்க தப்பு செஞ்சேன்? (சரி.. பரவாயில்ல.. நாடு கடத்துறதா இருந்தா பாண்டிச்சேரி மாதிரி நாடு பக்கமா கடத்துங்க)

/*கலையரசன் said...
எல்லா பதிவர்களும் படிப்பது போல எல்லோர் பற்றியும் எழுதுகின்றீர்கள்.
பக்கா பக்கா!!*/

ரொம்ப நன்றி. எல்லா கட்சியையும் கலாய்ச்சிருக்குறதனால அப்படி சொல்றீங்களா?

/*டைம் இருந்தா நம்ம பக்கத்திற்கும் வாங்க!*/

கண்டிப்பா வரேன் கலை.

மனுநீதி said...

உங்களுக்கு குச்சி முட்டாயும் குருவி ரொட்டியும் கெடைக்கரதுல இவளோ பிரச்சனை வரும்னு நான் நெனைக்கல :)

♫சோம்பேறி♫ said...

ஆமாங்க:-(( திரும்ப வாக்கெடுப்பு நடத்துறாங்களானு பாப்போம்.

(திரும்பவும் எல்லா கட்சிக்காரங்களும் அம்பது, நூறுனு குடுப்பாங்கள்ல?)

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket