Views
வரவேற்பறையில், தொலைக்காட்சி நெடுந்தொடரைப் பார்த்தபடி, அவள் அம்மாவும் என் அம்மாவும் ஓடிப் போனவர்கள் பற்றிய புள்ளி விவரங்களைப் பறிமாரிக் கொண்டிருந்தார்கள். அவள் அப்பாவும், என் அப்பாவும் காரியமாகக் கிளம்பி வெளியே போய் விட்டார்கள்(இழவு வீட்டில் என்ன காரியம் என்று நான் விளக்கத் தேவையில்லை).
அவள் வீட்டுத் தோட்டத்தில் நிலாவுக்கு வயிறெரியும் அளவு அல்லியை நெருங்கி முகர்ந்து கொண்டிருந்த அந்தத் தனிமையான இரவிலே.. ஒன்றும் நடக்கவில்லை. அது தான் தனிமையான இரவு என்று சொல்லி விட்டேனே!
கொலுசின் ஜலஜலப்பு, வளையலின் சலசலப்பு, பட்டுப்பாவாடை சரசரப்பு சகிதம் ஒரு கை பின்னாலிருந்து என் கண்களைப் பொத்தியது. அவள் முழங்கை வரை(மட்டுமே.. நிஜம்ம்ம்மா) தடவிப் பார்த்து விட்டு 'ஹேய்.. கேட்டி' என்றேன்.
'ஹைய்யோ.. எப்படிடா கண்டுபிடிச்ச' என்று விழி விரிய கேட்டுக் கொண்டே, என் பக்கத்தில் வந்து அவள் அமர்ந்த போது, சங்க காலத்திலிருந்து பல கவிஞர்களுக்கும் தோன்றிய அதே சந்தேகம் எனக்கும் தோன்றியது. 'பெண்கள் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா' என்பது அல்ல. அழகுக்கும், அறிவுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாதோ என்று.
ஆனால், இத்தனை வருடங்கள் ஓங்கி அப்ப வேண்டும் போல கடுப்பேற்றிய அவள் லூசுத்தனம், இப்போது அள்ளிக் கொஞ்ச அவாவுறும் குழந்தைத் தனமாகத் தோன்றுகிறது. ஆறு மாதங்களுக்கு முன் கடவுளே வந்து 'நீ அவளைக் காதலிப்பாய்' என்று சொல்லியிருந்தால் கூட நம்பியிருக்க மாட்டேன்.
'நீ மாடிப் படியில இறங்கி வரும் போதே பாத்துட்டேன். போதாக்குறைக்கு ஆட்டக்காரி மாதிரி வளையலும், கொலுசும் வேற' என்றேன்.
அவளுக்கு கேத்தரீனா ஜீட்டா ஜோன்ஸ் போலவே, வில்லைப் போல் வளைந்த மேல் உதடு. அந்த உதடுகளை வில்லில் நாணேற்றுவது போல விரித்து பூத்த புன்னகையைப் பார்த்தவுடன்,
Sssssssstopppp thatt bull sh*t smile. Or i wil stop it with my fuc*ing lllips' என கத்த வேண்டும் போல எழுந்த ஆசையை நாகரீகம் கருதி புதைத்து விட்டேன்.
'காட்டு வாசிகளாவே இருந்திருக்கலாம். எவன்டா கண்டுபுடிச்சது இந்த நாகரீகத்தையெல்லாம்!' என்று நினைக்கும் போது கோபம் வந்தது.
கத்தியிருந்தாலும் அவளுக்கு புரிந்திருக்காது. குட்டி ஒன்னாப்பையே இரண்டு வருடம் படித்த பிரகஸ்பதி அவள். என்று நினைத்ததும் லேசாக சிரிப்பு வந்தது.
அந்த இதழ்களை ஒரு முறை முத்தமிட்டு விட்டு செத்துப் போ என்று சொன்னால் மறுபேச்சு பேசாமல் சம்மதித்து விடுவேன். ஆனால் அப்படி கேட்க யாருமில்லையே என்று நினைத்த போது துக்கப் பெருமூச்சு வந்தது.
அந்தப் புன்னகையையே
சமாளிக்க முடியாமல்
தினறிக் கொண்டிருந்த போது..
வார்த்தைகளெனும்
அம்பையும் இதழெனும்
வில்லில் ஏற்றி
என் இதயத்தில் எய்தாள்..
(கவிதை வருதானு முயற்சி செய்து பார்த்தேன். வரல.. ஸோ.. மடக்கி மடக்கி எழுதாம நேராவே எழுதுறேன்)
பெருமூச்சுடன் துளைக்கப் பட்ட நெஞ்சைப் பிடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அவளைப் பார்க்க முடியாமல் குனிந்து முழங்காலில் தலையால் முட்டிக் கொண்டேன்.
நொடிக்கு நூறு முக பாவனைகள் மாற்றும் என்னைப் பார்த்து அவள் பயந்திருக்க வேண்டும். 'என்னாச்சு! உடம்பு சரியில்லையா?' என்று கேட்டுக் கொண்டே என் நெற்றியில் கை வைத்ததும்.. ஹைய்யோ.. காதலிக்காதவர்களெல்லாம் f*ckng idiots.. பெரிய பாவம் செய்தவர்கள்.
சிறுவயது முதல் நாங்கள் இருவரும் பல முறை கட்டிப் புரண்டு சண்டை போட்டிருக்கிறோம். அப்போதெல்லாம் தோன்றாத உணர்வு அவள் விரல் நுனி என் மேல் பட்டதும்..
'இல்லை. ஒன்னுமில்லை. எனக்கென்ன.. am good.. ஆமா.. என்னவோ கேட்டியே' என்றேன்.
முகத்தையும் குரலையும் குழைத்துக் கொண்டு 'ஷா பத்தி ஏதாவது சொல்லேன்' என்றாள்.
ஆமா! அது யார் அந்த ஷா. அவளுடைய காதலன்.
(தொடரும்)
தொடர் விதிமுறைகள்:
1) உங்களுக்குள் தூங்கும் கவிதை எழுதும் மிருகத்தைத் தட்டி எழுப்புங்கள். ஒவ்வொரு பாகத்திலும் ஒரு கவிதையாவது இடம் பெற வேண்டும்.
2) கெட்ட வார்த்தைகள் எதையும் உபயோகிக்கக் கூடாது.(நான் இலக்கியவாதியாகும் முயற்சியில் தீவிரமாக இருப்பதால், என்னால் கெட்ட வார்த்தைகளைத் தவிர்க்க முடியவில்லை.)
3) இதைத் தொடர ஒருவருக்கு மட்டுமே அழைப்பு விடுக்க வேண்டும். நண்பர்களை பகைத்துக் கொள்ள விரும்பாமல், என் followers 9 பேரும், நான் follow செய்யும் 99 பேரும், இது வரை எனக்குப் பின்னூட்டியிருக்கும் 999 பேரும், நான் இதுவரை பின்னூட்டியிருக்கும் 9999 பேரும் என்றெல்லாம் டகால்டி வேலை செய்யக் கூடாது.
4) அடுத்த பதிவெழுத மேட்டர் சிக்காத காரணத்தாலோ, நம் அழைப்பிற்கு யாரும் வர மாட்டார்கள் என்ற என்னத்திலோ உங்களுக்கு நீங்களே அழைப்பு விடுத்துக் கொள்ளக் கூடாது.
5) விதிமுறைகளை உங்கள் இஷ்டத்துக்கு மாற்றி அமைத்துக் கொள்ளக் கூடாது. இந்த விதிமுறைகளை உங்கள் பதிவில் காப்பி பேஸ்ட் செய்து கொள்ளக் கூடாது. 'விதிமுறைகளைத் தெரிந்து கொள்ள முதல் பாகத்தைப் படிக்கவும்' என்று என் வலைப்பூவிற்கு லிங்க் கொடுத்து, ஓசி விளம்பரம் செய்ய வேண்டும்.
6) இது முக்கோனக் காதல் கதையாக இருந்தாலும், யாருடைய காதலும் தோல்வியில் முடியக் கூடாது. அப்படி யாரையாவது பிரிக்கும் பதிவரை ஆரும் பதிவர் சந்திப்பில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஆரும் follow பண்ணக் கூடாது. ஆரும் அவருக்குப் பின்னூட்டக் கூடாது. அவங்களோட பழகுறவங்களுக்கும் அதே கெதி தான். இது இந்த நாட்டாமையோட தீர்ப்புடா.... தீர்ப்புடா.... தீர்ப்புடா....
7) மனைவி காப்பியில் சர்க்கரை குறைவாக போட்ட கோபத்திலோ, தொழில் முறைப் போட்டி காரணமாகவோ அடுத்த பாகத்திலேயே ஒரே குண்டில் அனைவரும் போய் சேர்ந்து விட்டார்கள் என்று கதையை முடித்தால், முந்தைய பாகம் வேறொரு பொருப்பான, சாத்வீகமான, வெஜிட்டேரியன் பதிவரிடம் கொடுக்கப் படும்.
8) மேற்கூறிய ஏழு விதிமுறைகளில் ஆறை மட்டுமே சாய்ஸில் விடலாம்.
இதன் அடுத்த பாகத்தை எழுத நான் அழைப்பு விடுப்பது வல்லாளர், நல்லாளர், கொல்லாளர் பதிவர் சோம்பேறிக்கு. நான்காம் விதி முறையை சாய்ஸில் விட்டு விட்டேன்:-)
பின் குறிப்பு: அடுத்தவர் கையில் கொடுத்தால் தான் இதற்குப் பெயர் சங்கிலிப் பதிவு என்று வாதிடுபவர்களுக்கு, இந்தக் கதையில் வரும் 'நான்' பாத்திரத்தின் பெயர் சங்கிலி. இப்போது கங்குலி என்று மாற்றிக் கொண்டார்(பார்ப்பதற்கு சோடா புட்டி போடாத கங்குலி போல் இருப்பார்) என்றாலும், சங்கிலி என்ற பெயர் கேட்சியாக இருப்பதால் அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும்.
11 மச்சீஸ் சொல்றாங்க:
இத நான் எதிர்பார்க்கல.
நடத்துங்க, நடத்துங்க...
Vijay...
எதை எதிர்பாக்கலனு புரியலயே விஜய்.
// என் காதல் அனுபவம் + தொடர் விதிமுறைகள்: //
இத நான் எதிர்பார்க்கல.... விஜய்
இது தான் நீங்க எழுத போறதா சொன்ன தொடரா? நல்லாவே எழுதிருக்கீங்க. தொடர் தொடர 'சங்கிலி' என்ற 'சோம்பேறிக்கு' எனது வாழ்த்துக்கள் :)
"ஷா"ன்னா அதிஷாவா??
சங்கலியோ கங்குலியோ கழுத்தறுக்குறதுக்கு எந்த பேரா இருந்தா என்ன?
ஓ.. தொடர் விதிமுறைகள் சும்மா டமாசுக்கு விஜய்.. ஏதாவது பிடிக்கலைனா எது பிடிக்கலைனு வெளிப்படையா சொல்லிடுங்க.
வாழ்த்துக்களுக்கு நன்றி உள்ளத்தில் இருந்து..
//அந்தப் புன்னகையையே
சமாளிக்க முடியாமல்
தினறிக் கொண்டிருந்த போது..
வார்த்தைகளெனும்
அம்பையும் இதழெனும்
வில்லில் ஏற்றி
என் இதயத்தில் எய்தாள்..
(கவிதை வருதானு முயற்சி செய்து பார்த்தேன். வரல.. ஸோ.. மடக்கி மடக்கி எழுதாம நேராவே எழுதுறேன்)
பெருமூச்சுடன் துளைக்கப் பட்ட நெஞ்சைப் பிடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அவளைப் பார்க்க முடியாமல் குனிந்து முழங்காலில் தலையால் முட்டிக் கொண்டேன்//
இங்க சோம்பேறி சோம்பேறின்னு ஒரு மானஸ்தர்ர்ர்ர் இருந்தாரு...இப்ப எங்கன்னு தெரியல
/*"ஷா"ன்னா அதிஷாவா??*/
ஐய்யோ.. அவுரு இல்ல சாமி..(தெரியாம, ரெண்டு கெட்ட வார்த்தை சேர்த்துட்டேன்) அடுத்த பாகத்தில பெயர் விளக்கம் சொல்றேன்.
/*சங்கலியோ கங்குலியோ கழுத்தறுக்குறதுக்கு எந்த பேரா இருந்தா என்ன?*/
ஹா ஹா.. :-))))
/*இங்க சோம்பேறி சோம்பேறின்னு ஒரு மானஸ்தர்ர்ர்ர் இருந்தாரு...இப்ப எங்கன்னு தெரியல*/
அவரு கிடைக்க மாட்டாரு. நிஷா, உஷா புயல்களுக்கு அக்கா கேத்தரீனா புயல் மையம்(ல்) கொண்டு எங்கேயோ கண் காணாத தீவுல கரை ஒதுங்கிட்டாரு.
கதையை படிச்சுட்டு விதிமுறைய படிச்சப்பத்தான் தெரியுது. நீங்க எவ்வளவு கொலவெறியில இருக்கீங்கன்னு..
அடுத்த பார்ட்டுக்காக வெயிட்டீஸ் :-)
//அந்தப் புன்னகையையே
சமாளிக்க முடியாமல்
தினறிக் கொண்டிருந்த போது..
வார்த்தைகளெனும்
அம்பையும் இதழெனும்
வில்லில் ஏற்றி
என் இதயத்தில் எய்தாள்..
(கவிதை வருதானு முயற்சி செய்து பார்த்தேன். வரல.. ஸோ.. மடக்கி மடக்கி எழுதாம நேராவே எழுதுறேன்)
//
LOL :-))
/*சென்ஷி said...
நீங்க எவ்வளவு கொலவெறியில இருக்கீங்கன்னு..*/
நோ கொலை வெறி ஜஸ்ட் டமாஸ்..
/*அடுத்த பார்ட்டுக்காக வெயிட்டீஸ் :-)*/
ஹைய்யோ.. டேங்க்ஸ் :-0
/*LOL :-))*/
சிரிக்காதீங்க சென்ஷி. சங்ககால அகராதி பாத்து தமிழ் கத்துக்கிட்டாவது உங்களுக்குப் போட்டியா நிச்சயம் வருவேன்.
Post a Comment
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.