ஏன் இளையராஜாவிற்கு ஆஸ்கார் விருது கிடைக்க வில்லை?

Monday, 23 February 2009

Views


கிடைக்கவும் கிடைக்காது. ரஹ்மானுக்கு இந்த விருது கிடைத்ததற்க்கு அவர் ஒரு ஹாலிவுட் திரைப் படத்திற்கு இசையமைத்ததே காரணமாக இருந்தாலும், ஒரு ஹாலிவுட் இயக்குனரை திரும்பிப் பார்க்க வைத்தது எது?

பெரும்பாலான மன நல மருத்துவர்கள, மன அழுத்ததைக் குறைக்க, 80களில் வந்த இளையராஜா பாடல்களைப் பரிந்துரை செய்கிறார்கள். ஏன் இப்போதெல்லாம் இளையராஜா இசையமைப்பதில்லையா? அல்லது இவ்வளவு நாள் கிணற்றுத் தவளையாக இருந்த நமக்கு இப்போது எல்லா வகையான இசையும் ஒரே க்ளிக்கில் கிடைப்பது தான் காரணமா? நிச்சயமாக இல்லை, அவரது 'பூவே செம்பூவே', 'ராஜ ராஜ சோழன் நான்' மாதிரிப் பல பாடல்கள் இன்றும் ரசிக்கும்படி தான் இருக்கின்றன(என்னை உருக்கியது இசையா, பாடல் வரிகளா என்று யோசிக்க முடியாத அளவுக்கு உருக்கியிருக்கின்றன). அது போல ஒரு பாடல் இன்று வராதா என்ற ஏக்கம் கூட இதை எழுத ஒரு காரணமாக இருக்கலாம்.

இளைய ராஜா தன்னை அப்டேட் செய்து கொள்வதில்லை, விரும்பவில்லை அல்லது தெரியவில்லை. இசை ஞானி என்ற அடை மொழியை மேஸ்ட்ரோ என்று மாற்றியது முற்றிலும் சரி. முக்காலமும் அறிந்தவர் தான் ஞானியாக முடியும். நிகழ் கால மக்கள் ரசனையையே இவரால் புரிந்து கொள்ள முடியவில்லையே!? (இப்போது எல்லாரும் ஸ்பானிஷ் வகை இசையை ரசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்று ரஹ்மான் குடியரசு தினத்தன்று கொடுத்த ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.)

அதற்காக நம்ம ஊர் இசையை குறை சொல்லவில்லை. நான் கடவுள் படத்தின் பாடல்கள் ஏதோ மாரியத்தா கோவிலில் கூழ் ஊத்தும் போது போடும் பாடல்கள் போல் இருக்கிறது. ராகம் பரவாயில்லை. தாளம் தான் டொண்டக்கு டொண்டன் என்று இருக்கிறது. இவரது 'பருவமே புதிய பாடல் பாடு' என்ற பாடலின் தாளம் நேர்த்தியானது. வெறும் டக் டக் என்ற ஷூ சத்தம் தான் என்றாலும் அசத்தியிருப்பார். அதே போல் 'ஹே ராம்' படத்தின் 'நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி' என்ற பாடலில் பியானோ மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்கும். பல முறை திரும்பத் திரும்ப கேட்ட பாடல் அது.

தாளம் என்றால் காதுக்குள் புகுந்து கபடி ஆட வேண்டும். (உதாரணம்: சக்கரைக்கட்டி படத்தில் வரும் டாக்ஸி)

தாளத்திற்கு மிருதங்கமோ, ட்ரம்ஸோ தான் உபயோகிக்க வேண்டும் என்பதில்லை. (உதாரனம் : சிவாஜி படத்தில் வரும் ஸ்டைல் பாடலில் சில இடங்கள்). மைக்கேல் ஜாக்ஸனின் 'கோஸ்ட்' என்ற பாடலின் பாணியில் இது அமைந்திருந்தது. (பாணி நகல் அல்ல. ஆனாலும் அது போன்ற ஒரு பாடல் தமிழில் வர இத்தனை ஆண்டுகள் தேவைப் பட்டிருக்கிறது.)

படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இடம் பெற்றிருப்பதாலோ என்னவோ மற்ற பாடல்களை பாலா கண்டு கொள்ளவில்லை. தன்னால் எப்படிப் பட்ட பாடலையும் காட்சியமைப்பின் மூலம் பிரமாதப்படுத்த முடியும் என்ற தன்னம்பிக்கையும் காரணமாக இருந்திருக்கலாம்.(பிச்சைப் பாத்திரம் பாடல் இதற்கு உதாரணம்.).

ஹர ஹர மஹாதேவ் பாடல் தேறியிருப்பதன் காரணம், உடுக்கை போன்ற வித்தியாசமான இசைக் கருவிகளை பயன்படுத்தியிருப்பதாக இருக்கலாம்.

நந்த லாலாவின் கானா உலக நாதனை இசை அமைப்பாளராக்கியிருக்கலாம்.

9 மச்சீஸ் சொல்றாங்க:

http://urupudaathathu.blogspot.com/ said...

எப்படி அப்படி சொல்லலாம்??
அவருக்கு கிடைத்த வாய்ப்புகள் ( த்யாரிப்பாளர்/ இயக்குனர்) அப்படி என்று ஒரு கோணம் இருக்கிறது...
அந்த கோனத்தில் ஏன் நீங்கள் பார்க்கவில்லை
????

♫சோம்பேறி♫ said...

எவ்வளவோ மொக்கையான இயக்குனரின் படங்களுக்கெல்லாம் ராஜா 80களில் நல்ல இசையைக் கொடுத்திருக்கிறார். நந்தலாலாவிலும் சொதப்பியிருக்கிறார். மிஷ்கினின் முந்தைய படங்களின் இசையை கவனிக்க.

http://urupudaathathu.blogspot.com/ said...

அப்படி பார்க்கும் போது, ஆஸ்கர் குடுக்கும் அளவுக்கு ஜெய் ஹோ பாடல் ஒன்னும் பெரிதல்ல்...

மொக்கை பாடல், ஏதோ இயக்குனர் uk ஆள் என்பதால் இந்த அவார்ட் கிடைத்திருக்கலாம்.

Anonymous said...

//அப்படி பார்க்கும் போது, ஆஸ்கர் குடுக்கும் அளவுக்கு ஜெய் ஹோ பாடல் ஒன்னும் பெரிதல்ல்...

ஆமாங்க. அது ஒரு மிகவும் சாதாரண பாடல். ATM ல வருமே 'எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே' அந்த பாடலை கொஞ்சம் மாத்தி பண்ணி இருக்காரு அவ்ளோதான். இந்த song-கு Oscar கெடச்ச பிறகு எனக்கு Oscar Award மேல இருந்த மரியாதை போய்டுச்சு.

♫சோம்பேறி♫ said...

கருத்துக்கு நன்றி அணீமா மற்றும் முத்து.

ஒப்புக் கொள்கிறேன். ஜெய் ஹோ ரஹ்மானின் மாஸ்டர் பீஸ் கிடையாது என்றாலும், அது மொக்கையான பாடல் என்பதெல்லாம் ரொம்ப ஓவர். ஆஸ்கருக்குத் தேர்வான படங்களில் இசைத் துறையில் போட்டி குறைவாக இருந்தது கூட, அவருக்கு ஆஸ்கார் கிடைத்ததற்கு காரணமாக இருந்திருக்கலாம். ஆனாலும் ரஹ்மான் ஆஸ்காருக்கு இருநூறு சதவீதம் பொருத்தமானவர். He deserved it.

ஒரு வேளை ATMமை உலக தரத்தில் எடுத்திருந்தால் 'எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே'க்குக் கூட ஆஸ்கார் கிடைத்திருக்கலாம்.

ramesh sadasivam said...

விருதுகள் ஒருவரின் திறமைக்கு இறுதித் தீர்வல்ல.

இசைஞானிக்கு ஆஸ்கார் கிடைக்காது என்று நீங்கள் சொல்வது சும்மா ஒரு அசட்டு தைரியம். அன்பே சிவத்தில் சுனாமி வராதென்று மாதவன் சொல்வது போல.

அவரிடம் இருக்கும் இசை வளமை வேறு எந்த இசையமைப்பாளருக்கும் இன்று கிடையாது. ரஹ்மான் உள்பட.

நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கங்களை படிக்கும் பொழுது நீங்கள் நவீன யுகத்தின் இயந்திரத்தனத்தில் சிக்கி மென்மையான இசையை ரசிக்கும் திறனை இழந்த வெகு ஜனத்தில் ஒருவர் என்பது தெளிவாக தெரிகிறது.

நந்தலாலா சொதப்பியிருக்கிறார் என்பதே சாட்சி. நான் நந்தலாலா பாடல்களை மீண்டும் மீண்டும் ரசித்துக் கொண்டிருக்கிறேன். மிஷ்கின் முந்தைய படங்களில் குத்துப் பாட்டு தான் பிரபலம் அடைந்தது.

ramesh sadasivam said...

இசைஞானிக்கு ஆஸ்கார் கிடைக்காது என்று நீங்கள் சொல்வது சும்மா ஒரு அசட்டு தைரியம். அன்பே சிவத்தில் சுனாமி வராதென்று மாதவன் சொல்வது போல.

அவரிடம் இருக்கும் இசை வளமை வேறு எந்த இசையமைப்பாளருக்கும் இன்று கிடையாது. ரஹ்மான் உள்பட.

நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கங்களை படிக்கும் பொழுது நீங்கள் நவீன யுகத்தின் இயந்திரத்தனத்தில் சிக்கி மென்மையான இசையை ரசிக்கும் திறனை இழந்த வெகு ஜனத்தில் ஒருவர் என்பது தெளிவாக தெரிகிறது.

நந்தலாலா சொதப்பியிருக்கிறார் என்பதே சாட்சி. நான் நந்தலாலா பாடல்களை மீண்டும் மீண்டும் ரசித்துக் கொண்டிருக்கிறேன். மிஷ்கின் முந்தைய படங்களில் குத்துப் பாட்டு தான் பிரபலம் அடைந்தது.

ramesh sadasivam said...

ஆஸ்கார் விருது கொடுக்கப்படுவதில் சில தந்திரங்கள் இருப்பது உங்களுக்கு தெரியாது போலும்.

இன்றைய தேதியில் பொருளாதார நிலையில் நல்ல முதலீடு செய்யும் திறன் இந்தியர்களிடம் தான் இன்று இருக்கிறது. இப்பொழுது இந்தியர்களுக்கு விருது கொடுத்தால் இந்தியர்கள் பலர் ஹாலிவுட்டில் முதலீடு செய்ய முன்வருவார்கள் என்பது தான் அடிப்படைக் காரணம்.

இந்த படத்துக்கு சிறந்த திரைப்படம் விருது வேறு கொடுத்திருக்கிறார்கள். அதோடு போட்டியிட்ட மற்ற படங்களை நீங்கள் பார்த்ததுண்டா? நான் changeling பார்த்திருக்கிறேன். ஆஸ்கார் அல்ல அது அநியாயம் என்பது உங்களுக்கு புரியும்.

♫சோம்பேறி♫ said...

Hi Anima, Muthu and shri ramesh sadasivam,

I guess u r all right.. Sorry abt this post..

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket