சிறந்த பின்னனி பாடகிக்கான, இசையருவியின் தமிழிசை விருது, ஸ்ருதிஹாசனுக்கு 'அடியே கொல்லுதே' பாடலுக்காக கொடுக்கப்பட்டதைக் கூட மன்னித்து விடலாம். 'வேர் இஸ் த பார்ட்டி.. ஆங்.. உங்க ஊட்ல பார்ட்டி' பாடலுக்காக, சிம்புவுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது கொடுக்கப்பட்டதைத் தான், டன் கணக்கில் இஞ்சிமரப்பா சாப்பிட்டும் ஜீரணிக்க முடியவில்லை.
கமலுக்கு தசாவதாரத்துக்காக சிறந்த கதாநாயகன் விருது கொடுக்கப்பட்டது. அவர் சார்பாக, ஸ்ருதிஹாசன் பெற்றுக் கொண்டார். ஹ்ம்ம்ம்.. நானென்னவோ விருதென்பது புதியவர்களை அடையாளப்படுத்தி, ஊக்குவிப்பதற்க்குத் தானென நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
பட். ஓக்கே. எல்லா விருதுகளையும் வீணடிக்கவில்லை. ராபர்ட், ஜேம்ஸ் வசந்தன், கண்கள் இரண்டால் பாடலைப் பாடியவர் (பெயர் மறந்து விட்டது) என விருதுக்குத் தகுதியான சிலருக்கும் கொடுத்திருந்தார்கள்.
ராபர்ட், விபத்தில் உடைந்த காலில் கட்டோடு, சூயிங்கம் மென்றபடி, வந்து சிறந்த நடன அமைப்பாளருக்கான விருதைப் பெற்றுக் கொண்டார். ஸ்டேஜ் ஃபியரை மறைப்பதற்காக சூயிங்கம் மென்று கொண்டிருந்தார் போல. ஆனாலும், பேட் மேனர்ஸாகத் தான் பட்டது.
டி.எம்.எஸ் நிகழ்ச்சியை ரொம்ப ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். விட்டிருந்தால் சனா கான், அனுயாவோடு ஸ்டேஜில் ஏறி ஒரு குத்து டான்ஸ் போட்டிருப்பார் போல. அவருக்கு விருது கொடுக்கப்பட்ட போது, தங்கப்ப தக்கம் சிவாஜி போல குரலை இறுக்கிக் கொண்டு, கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்ட கர்வத்துடன், 'பெரியவங்கள்லயிருந்து சின்னவங்க வரையிலும் என்னை ரசிக்காதவங்க யாருமில்ல. ஐ'ம் த பெஸ்ட்' என்ற ரீதியில் பேசினார்.
அவரது ரசிகர்கள் ரசித்திருக்கக் கூடும். அவரது குழைவான குரல் எனக்குப் பிடிக்காது என்பதால், எனக்கு அவர் பேசியது டூ மச்சாகத் தான் தோன்றியது.
*.*.*.*.*.*.*.*.*
ஸ்ரீவில்விப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. ஆண்டாளின் பர்த் டேயை க்ராண்டாகக் கொண்டாடும் பொருட்டு, பத்து நாட்களுக்கு முன்பிருந்தே, கோவில் வாசலில், ஷங்கர் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக, அழகாக பந்தலிட்டு, மாலை வேளைகளில் இசை நிகழ்ச்சி, சொற்பொழிவு என்று களை கட்டிக் கொண்டிருந்தது.
கோவில் பிரசாத ஸ்டால் அருகே, ஒரு கையில் சுதர்சனமும், ஒரு கையில் சங்கும், மற்ற இரு கைகளால் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டும், காட்சி தரும் வேணு கோபாலரின் அரிதான சிலையை ஒட்டடை கூட அடிக்காமல் வைத்திருக்கிறார்கள். ஹ்ம்ம்ம்..
தேரோட்டத்தை எல்லா லோக்கல் சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்பினார்கள். வழக்கம் போல ஆண்டாள் ஜொலித்தார்.
ஹேப்பி பர்த் டே டு யூ ஆண்டாள்.. வீ லவ் யூ..